செய்திகள்

மெரினா காந்தி சிலை அருகே எல்.இ.டி. விளக்குகளுடன் ஔிரும் வேகத்தடை சிக்னல்

Spread the love

சென்னை, ஜூன்.12-

விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களைத் தடுக்கும் வகையில் சாலையில் ஒளிரும் எல்.இ.டி. மின் விளக்குகளுடன் ஔிரும் வேகத்தடை சிக்னலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே சோதனை முறையில் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர்.

சென்னையில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவதற்கும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து விதிகளை மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து போலீஸ் பிரிவு

சிறிய அளவிலான வேகத்தடைபோல் நீளமாக எல்.இ.டி. சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடைகள் சோதனை அடிப்படையில் மெரீனா கடற்கரை பகுதியில் காந்தி சிலை சிக்னல் சந்திப்பில் காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து சிக்னலுடன்  இணைக்கப்பட்டுள்ளது

இந்த வேகத்தடையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி.விளக்குகள் போக்குவரத்து சிக்னல் போன்றே ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிக்னலில் சிவப்பு நிறம் காட்டும்போது சாலையில் சிவப்பு நிற எல்.இ.டி விளக்குகளும், பச்சை நிற சிக்னல் காட்டும் போது பச்சை நிற எல்.இ.டி.யும் தானாகவே ஒளிரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னலை கவனிக்கத் தவறினாலும் கூட இந்த எல்.இ.டி. விளக்குகளை கவனிக்காமல் இருக்க முடியாது.

நாட்டிலேயே இப்படிப்பட்ட எல்.இ.டி. விளக்குகளுடனான வேகத்தடைகள் இங்குதான் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இந்த திட்டம் வெற்றியடைந்தால் அடுத்த கட்டமாக, சென்னையில் உள்ள சிக்னல்களிலும், யூ வளைவுகள் ஆகிய இடங்களில் பொருத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சாலையில் தரையில் ஒளிரும் விளக்குகள் ஒரு புது அனுபவமாக இருப்பதாகவும், பகலை விட இரவில் இவை காண்பதற்கு மிக அழகாக இருப்பதுடன் சிக்கலில் சரியான இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு உதவியாகவும் உள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.

இ–செலான் மூலம் 15 ஆயிரம் வழக்கு பதிவு

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலிப்பதற்காக நவீன 352 இ–செலான் கருவிகளை கடந்த 7ம் தேதி போக்குவரத்துப் பிரிவு அறிமுகப்படுத்தியது. இந்தக் கருவியின் மூலம் கடந்த 4 நாள்களில் 15,534 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *