போஸ்டர் செய்தி

மெட்ரோ ரெயில் 2–ம் கட்ட திட்டப்பணிகள்: தரமணி, சிறுசேரி பகுதிகளில் மண் பரிசோதனை

சென்னை, செப்.11-

மெட்ரோ ரெயில் 2–ஆ-ம் கட்ட திட்டப்பணிகளை தரமணி, சிறுசேரியில் மண் பரிசோதனை நடைபெற்றது. ஜப்பான் அரசு நிதி அளித்தவுடன் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பான் அரசு நிதி நிறுவனம்(JICA) கடன் அளித்தவுடன், இரண்டாம் கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ தொடங்கும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மெட்ரோ பணிகளை தொடங்க ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது இத்திட்டத்துக்கு கடன் உதவி பெற ஜப்பான் அரசு நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு ஜப்பான் அரசு நிதி நிறுவனம் கடன் வழங்க வேண்டும். இரண்டாம் கட்ட பணிகளைத் தள்ளி போட முடியாது. ஜப்பான் அரசு நிதி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான ஒப்புதல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் இதற்கான முதல் தவணையை அளித்தவுடனேயே மெட்ரோ பணிகள் தொடங்கப்படும்.

சென்னை மெட்ரோவின் முதல் கட்டத் திட்டத்தில் வடசென்னை பகுதியில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில் வழித்தட பாதை அமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழித்தடத்துக்கான ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மாநில அரசு 2010ல் ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.80 கோடி செலவில் 2-ம் கட்ட திட்டம்

ரூ. 80 கோடி செலவில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாநில அரசின், 20 முதல் 25% நிதியுதவியுடனும், மத்திய அரசின் நிதியுதவியுடனும், ஜப்பான் அரசு நிதி நிறுவனத்தின் கடன் வசதியுடனும் இரண்டாம் கட்டம் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஏற்கனவே தமிழக அரசு அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மத்திய அரசு நிதியுதவி அளிக்காத பட்சத்தில் மீதமிருக்கும் 20% நிதியும் மாநில அரசிடம் பெறப்படும். அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி தடங்களில் மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டத் திட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என 3 வழித் தடங்களில் 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மொத்தமாக 116 ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

முதற்கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என 2 வழித்தடங்களில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு மட்டும் ரூ.44கோடி நிதி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை

கடந்த பிப்ரவரியில், இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நுண்ணிய வடிவமைப்பு, மண் பரிசோதனை ஆகியவற்றிற்காக 9 நிறுவனங்களுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி, தற்போது மாதவரம், புரசைவாக்கம், தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மூன்று வழித்தடங்களிலும், நிலையங்கள், ரயில் பாதை அமைக்க ஆய்வுப் பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும், சில வாரங்களில் மூன்று வழித்தடங்களுக்கான விரிவான வரைபட பணிகளைத் தொடங்கவுள்ளது. இந்த வரைபடம் ஒவ்வொரு நிலையத்தின் துல்லியமான இடத்தையும் காண்பிக்கும். அதாவது, மெட்ரோ ரயில் எந்த சாலை வழியாகப் பயணிக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வரைபடம் தெளிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் இருவழி

சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ரயில் நிலையங்களுக்கு மக்கள் சென்று வர 2 வழிகள் மட்டுமே இருக்கும். முதல் கட்ட திட்டத்தில் பயணிகளுக்காக 4 வழிகள் அமைக்கப்பட்டிருந்தது. 4 வழிகளுக்கான தேவை ஏற்படவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயிலில் பயணிக்கும் மக்கள் தொகையை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் கட்ட திட்டத்திலேயே இரண்டு வழிகள் போதுமானதாக இருந்திருக்கும். மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, தற்போது இரண்டாம் கட்ட திட்டத்தில் 2 வழிகள் மட்டுமே அமைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தின் பரப்பளவு

சென்னை மெட்ரோ நிர்வாகம் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான இடத்தை சுருக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் 9 ஆயிரம் சதுர கி.மீ நிலம் தேவைப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *