மெக்சிகோ, அக்.6–
மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேயர் உள்பட 18 பேர் பலியானார்கள்.
தெற்கு மெக்சிகோவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரேரோ மாகாணத்தில் உள்ள டோட்டோலாபானில் இந்த தாக்குதல் நடந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மெக்சிகோவில் உள்ள டேரா கலிண்ட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பகுதியாக உள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கவுன்சில் ஊழியர்களும் கொல்லப்பட்டனர்,