செய்திகள்

மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் பலி

மெக்சிகோ, ஆக.4–

மெக்சிகோ நாட்டில் 42 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. இந்த இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 42 பயணிகள் இருந்தனர்.

பஸ் மாநில தலைநகரான டெபிக்கிற்கு வெளியே நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்சில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *