வாழ்வியல்

மூன்று திரைகளுடன் கூடிய மடிக்கணினி உருவாக்கம்!

Spread the love

கடந்த ஆண்டு அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள், மடிக்கணினிக்கு கூடுதல் திரையை ஒட்ட வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தினர்.
‘டூயோ’ என்ற இந்த இரு திரை வசதிக்கு ஏகப்பட்ட வரவேற்பு, அதை வாங்கியவர்கள், இரண்டு போதாது, மூன்று திரைகள் வேண்டும் என்று கேட்டனர்.
எனவே, அண்மையில் ஒரு மடிக்கணினி திரையோடு, இரண்டு புதிய திரைகளை பொருத்தும் வசதியை, டிரையோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர்.
மடிக்கணினி திரையின் பின்புறம், ஒட்ட வைக்கக்கூடிய ஒரு சட்டகம், இடது – வலது புறங்களில் திரையை பொருத்தும் கிளிப்புகள் ஆகிய வசதிகள் கொண்ட டிரையோ, புரோகிராமர்கள், கணினி விளையாட்டு பிரியர்கள், அலுவலக கூட்டங்களுக்கு என்று பல இடங்களில் முத்திரை பயன்படும் என, டிரையோவின் தயாரிப்பாளர்கள் சொல்கின்றனர்.
டிரையோவின் விலை, 26 ஆயிரம் ரூபாயை தொடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *