செய்திகள்

முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அதிநவீன நோவா டெக்னிக் சிகிச்சை முறை

மதுரை,டிச.6–

தென் தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் முழு மூட்டு மாற்று அறுவை சிகிக்சையில் அதிநவீன சிகிச்சை முறையன நோவோ டெக்னிக் முறையில் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அகநோக்கி வழி சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் ஜெயேஷ் சோனாஜி கூறியதாவது:–

தற்போதைய வாழ்க்கை முறையில் மூட்டு மாற்று என்பது 60 வயதைக் கடந்தவர்களுக்கு சாதாரணமாக செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாக உள்ளது. மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் முறையான சிகிச்சை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை படிப்படியாக வளர்ந்து இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை நிபுணரைக் கொண்டு மிக குறைந்த நேரங்களில் மிக குறைவான கருவிகளைக் கொண்டு மிகவும் துல்லியமாக செய்யப்படுவதால் மூட்டுகளில் செயல்பாடும் மிகச்சரியாக, மிகசிறந்த பலன்களை வழங்குகிறது அது மட்டுமல்லாமல் முக்கியமாக குறைந்த செலவில் செய்யப்படுவதால் நோயாளிகளுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. இந்த அதிநவீன அறுவை சிகிச்சை சுமார் 2 மணி முதல் 2 ½ மணி நேரம் நடைபெறும். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தங்களின் வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்பி விடலாம். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த 1 மாதத்திலேயே வெளியே செல்லலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். ஒரு மூட்டு மாற்றினால் 3 நாட்களும் 2 மூட்டுகள் மாற்றினால் 5 நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கலாம் என்று கூறினார்.

அப்பல்லே மருத்துவமனை குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரோகிணி ஸ்ரீதர் பேசியதாவது:-–

உலக அளவில் நடைமுறைபடுத்தப்படும் புதிய அதிநவீன நுட்பங்களை பின்பற்றுவதில் அப்போலோ மருத்துவமனைக் குழுமம் மிகவும் முன்னோடியாக உள்ளது. மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையும் தற்போது இந்த வகையில் அதிநவீன சிகிச்சை முறைகளின் மூலம் நோயாளிகளுக்கு குணமளிப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளது. இங்கு மேலை நாடுகளுக்கு இணையான உலகத்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மேலைநாடுகளில் பணியாற்றி இணையில்லா பயிற்சியால் நல்ல அனுபவம் பெற்ற டாக்டர்கள் இந்த சிகிச்சை முறைகளை திறம்பட கையாள்கின்றனர் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *