மும்பை, செப். 6–
மும்பை டைம்ஸ் டவர் 7 மாடி வணிக வளாக கட்டிடத்தில் இன்று கலையில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையின் புகழ்பெற்ற கமலா மில் வளாகத்தில் அமைந்துள்ள ‘டைம்ஸ் டவர்’ கட்டிடத்தில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. லோயர் பரேல் பகுதியில் உள்ள இந்த வணிக கட்டிடம் ஏழு மாடிகளைக் கொண்டது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து ஓடினர். உடனே, தீயணைப்பு வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 9 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அசம்பாவிதம் இல்லை
தீ விபத்து ஏற்பட்டு 1 முதல் 3 மாடி கொண்ட வளாகங்கள் எரிந்து நாசமாகியது. தீ விபத்து ஏற்பட்ட வளாகங்களில் யாரு இல்லாத நிலையில், இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இதே போல் ஒரு சம்பவம் தெற்கு மும்பையின் பைகுல்லா பகுதியில் உள்ள 57 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நள்ளிரவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தொடர் முயற்சிக்கு பின் தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.