மும்பை, பிப்.13–
மும்பை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்த முதலாம் ஆண்டு மாணவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்து உள்ளது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சோலாங்கி என்ற மாணவர் சேர்ந்து உள்ளார்.
பி.டெக் எந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டு சேர்ந்த அவர் ஐ.ஐ.டி.யின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அந்த வழியே சென்ற விடுதியின் பாதுகாவலர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த மாணவர் தங்கியிருந்த விடுதி அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை.