செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை, டிச. 22–

அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றார்.

தி.மு.க. வேட்பாளர்

வழக்கு

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டி விட்டும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன்களை விநியோகம் செய்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள்போல பயன்படுத்தியுள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். வழக்கின் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து, அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *