செய்திகள்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணம்: எடப்பாடி, ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் வாழ்த்து

Spread the love

சென்னை, செப். 12–

முன்னாள் அமைச்சரும், அண்ணா தி.மு.க. விவசாய பிரிவு செயலாளரும், திருவண்ணாமலை மாவட்ட பால் வள தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மகன் டாக்டர் கே.ஸ்ரீதர் – டாக்டர் எஸ். சூர்யா திருமணம் இன்று சென்னையில் மிக சிறப்பாக நடந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானபேர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் டாக்டர் கே.ஸ்ரீதர் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். டாக்டர் எஸ். சூர்யா பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

இவர்களது திருமணம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மிக விமர்சியாக நடந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நோில் வந்து மணமக்களை வாழ்த்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கருப்பண்ணன், எம்.சி.சம்பத், டாக்டர் சரோஜா, கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பென்ஜமின், சேவூர் ராமச்சந்திரன், சபாநாயகர் ப.தனபால், அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் ப.மோகன், எஸ்.கோகுல இந்திரா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர். இளங்கோவன் உட்பட ஏராளமானபேர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *