செய்திகள்

முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

தலைமைக் கொறடா, கலெக்டர் குத்துவிளக்கேற்றினர்

 

அரியலூர், மே.30–

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 7 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி பார்வையிட்டனர்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், சீருடைகள், விலையில்லா நோட்டு புத்தகங்கள், போன்ற 14 வகையான விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இடைநிற்றலை தவிர்க்க வகையில் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்கள். மேலும் பள்ளி மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்பதற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு ஆய்வாளர்களும் போன்ற பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பிலும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சோழன்குடிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலும் ஆக மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

மாணவ மாணவிகள் தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று உலகின் தலைசிறந்த வல்லுநராக திகழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *