செய்திகள்

முதல்வரின் ரூ.1500 அறிவிப்பு: ஆத்தூர் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆத்தூர், மார்ச் 9–

குடும்ப தலைவிக்கு ரூ.1500 மாதந்தோறும் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பெண்கள் நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் பொதுமக்களுக்கு திட்டங்களை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அண்ணா திமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, ஆத்தூர் நகர செயலாளர் மோகன் தலைமையில் மகளிர் அணயினர் 500 பேர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த விழாவில், மகளிர் அணியைச் சேர்ந்த சுஜாதா, ரேஷ்மா, செல்வி, ராணி, உமா, சரோஜா, விந்தியா, முனியம்மா, ராஜாத்தி மற்றும் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *