சிறுகதை

முதலீடு | ராஜா செல்லமுத்து

மிக பிரமாண்டமாக செலவு செய்யும் ஒரு கட்டிட இன்ஜினீயர் அடுத்தவர்கள் கொடுக்கும் பணத்தில் படோடோமாக ஆடம்பரமாக செலவு செய்வார். அவர் நினைத்தது தான் சட்டம். அவர் வைத்ததுதான் கட்டிடம் என்று அவர் கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்காரர்களிடம் ஆடம்பரச் செலவுகளை இழுத்து விடுவார்.

சார் இவ்வளவு செலவில் இந்த கட்டடம் கட்டணுமா? கொஞ்சம் குறைங்க சார். எங்களுக்கு தாங்காது. ஏற்கனவே வட்டிக்கு பணம் வாங்கி நிறைய செலவு செஞ்சாச்சு. முடியல கொஞ்சம் குறைச்சு செலவு வச்சு, என்ன கட்டிடம் நல்ல முறைக்கு வர விடுங்க. இல்லன்னா இந்த கட்டிடத்தை கட்டி அப்படியே வேற ஆள் இருக்கு.அடமானம் வைக்க வேண்டிய தான் எங்களால ஒன்னும் செய்ய முடியல சார் என்று கட்டிட என்ஜினீயர் முருகுவிடம் முறையிடுவார்கள் கட்டிடம் கட்டிக் கொண்டிருப்பவர்கள்.

சரி சரி சரி என்று தலையாட்டு வானே தவிர அத்தனையும் அவன் நினைத்ததை செய்வான். செங்கல் வாங்குவது, சிமெண்ட் வாங்குவது மணல் வாங்குவது, என்று நூறு ரூபாய்க்கு வாங்குவதை 300 ரூபாய் கூட கொடுத்து வாங்குவான்

நீங்க போயும் போயும் இந்த முருகு கிட்டயா நீங்க வச்சீங்க அவன் ஒன்னுக்கு ரெண்டாவில்ல செலவழுத்து விடுவான் .அவ. வீடு கட்டித்தான் நாங்க இப்போ கடன்காரனாக இருக்கிறோம்

30 லட்ச ரூபாயில முடிக்கற வீட்ட 90 லட்ச ரூபா செலவில் செலவழித்த மகாராசன் அவன். எங்க அதிகமான விலை இருக்கோ அதைத்தான் வாங்குவான்.

ஆனா பொருள் தரம் இருக்காது. பொருளும் தரமில்ல. விலையும் அதிகம். அதனால இந்த மாதிரி ஆள நீங்க என்ஜினீயர் வச்சது நாளை உங்களுக்கு நிறைய செலவாகும் என்று நினைக்கிறேன் என்று வீடுகட்டிக் கொண்டிருக்கும் மாசிலாமணியிடம் முறையிட்டார் இன்னொருவர்.

அவர் சொன்னதைக் கேட்டு வாயடைத்து நின்றார் மாசிலாமணி.

உண்மைதான். நீங்க சொல்றது கரெக்ட். அவர் ஒன்னுக்கு ரெண்டா தான் செலவு செய்து வருகிறார். பார்ப்போம் என்று மாசிலாமணி சொன்னார்.

அவரின் கட்டிடம் அவர் போட்ட பட்ஜெட்டை தாண்டி ரொம்பவே அதிகமாக நின்றது. முருகுவிடம் முறையிட்டார்.

ஏன் தம்பி 50 லட்ச ரூபாயல முடிச்சு தரேன்னு, இந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பிச்சீங்க. ஆனா இப்போ ஒரு கோடி ரூபா செலவு செஞ்சு, என்ன கடங்காரன் ஆகிட்டீங்க .ரொம்ப வருத்தமா இருக்கு தம்பி

ஓகே இந்த வீடு நீங்க எப்ப கட்டி முடிப்பீங்க என்று மாசிலாமணி கேட்க

இன்னும் பத்து நாள்ல முடிஞ்சுரும் என்று சொன்னான்முருகு.

பத்து நாளைக்குள்ள முடிக்கிறதுக்கு முன்னாடி ஏழாவது நாளில் சாவிய நா வேற ஆள் கிட்ட கொடுக்க போறேன் என்றார் மாசிலாமணி

ஏன் சார் என்று ஆச்சரியமாகக் கேட்டான் முருகு.

ஏன்னா நீ பண்ணி இருக்கிற வேலை என்ன தெரியுமா? நான் வீடு கட்டி குடியேறலாம்னு நினைச்சேன். ஆனா அந்த வீட்ல இப்ப நான் குடியேற முடியல கடனுக்கு வாங்கி, வாங்கி இப்ப கூட விட அதிகமாக கடன் ஆகிப்போச்சு. இப்போ கடன் கொடுத்தவன் கழுத்தில் கை வைக்கிறான். காசு கொடுக்கவில்லை. காசு கொடுக்க வேற வழி இல்ல. அதனால கட்டின வீட்ட கடன்காரர்ட்ட ஒப்படைக்க போறேன். இப்போ இது என்னுடைய வீடு இல்ல.கடங்காரன் வீடு. புது வீடு கட்டி புதுமனை புகுவிழா போகலாம்னு நெனச்சு என்னை கடங்காரன் ஆக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டேன் நீ நல்லா இருப்பா! நீ எல்லாம் நல்லா இரு, என்று சொல்லி முருகுவை திட்டி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் மாசிலாமணி .

சொல்லியபடியே பத்து பதினைந்து நாட்கள் கழித்து வீடு கட்டி முடிந்தது

ஆனால் அந்த வீட்டில் மாசிலாமணி குடியேறவில்லை. மாறாக கடன் கொடுத்தவர்கள் தான் குடியேறினார்கள். அவர்களிடமும் போய் உங்களுக்கு நல்ல வீடு ஒன்று கட்டித் தருகிறேன் என்று அடி போட்டான் முருகு.

அவர்களும் நிச்சயமா செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால் முருகுவின், ஐடியா என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

இரண்டு வீடுகள் தான் கட்டி முடித்திருப்பான், முருகு.

அதுவரையில் வீடு இல்லாமல் இருந்த, முருகு இப்போது, ஒரு பெரிய வீட்டை கட்டிக் கொண்டு வருகிறான் என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *