செய்திகள்

முடிச்சூர் ஊராட்சியில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண உதவி: டி.கே.எம்.சின்னையா வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம்,மே 23-

தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சி லட்சுமிபுரம் மசூதி தெருவில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வழங்கினார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக தமிழ்நாட்டில் 4-வது கட்டமாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தினர் உதவி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அதன்படி தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சி, அகரம்தென் ஊராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, பீர்க்கன்காரணை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டி.கே.எம்.சின்னையா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில் முடிச்சூர் ஊராட்சி, லட்சுமிபுரம் மசூதி தெருவில் உள்ள 150க்கும் மேற்பட்ட முஸ்லிம் தாய்மார்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார். அப்போது முஸ்லிம் தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இந்த தொகுதியில் உள்ள எங்களை யாருமே கண்டுகொள்ளாத நிலையில், முன்னாள் அமைச்சர் எங்கள் பகுதிக்கு வந்து உதவி செய்தார். அவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று ஒழிப்புக்கு கடுமையாக உழைத்து வருகிறார். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் வேண்டும் டி.கே.எம்.சின்னையா கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *