நல்வாழ்வு
மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ ஆவாரம்பூ
தங்கத்தை போன்று பளிச்சிடும் ஐந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி ஆவாரம் செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. விதைகள் காமத்தை பெருக்கக்கூடியது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தானாக வளரக்கூடிய செடிவகை. ஆடி மாதத்திற்குப்பின் பூக்கத் தொடங்கும் செடி இந்த ஆவாரம் பூ செடி. பெரும்பாலனவர்கள் பூஜைக்காக பயன்படுத்துவதுண்டு.
தைதிருநாள் பொங்கல் பண்டிகைக்கும் வீடுகளில் இந்த ஆவாரம் பூக்களை தமிழர்கள் வைத்து வழிபடுவதுண்டு. இதனுடைய இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய் ஆகிய அனைத்து பகுதிகளும் மருத்துவ பயனுடையவை. அதிலும் பூக்கள் அதிகளவு மருத்துவகுணம் கொண்டது.
“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்பது சித்தர் வாக்கு.
மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ இந்த ஆவாரம் பூ. ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.
முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்க தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட களிம்புகளை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூ பொடியை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி, முகம் அழகு பெரும்.
––