வாழ்வியல்

முகப்பருக்கள் வராமல் தடுக்கும் முல்தானிமெட்டி

முல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கும். இதனால் பருக்கள், தோல்நோய் ,சருமச் சேதம் வராது. எனவே முக அழகைப் பராமரிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம் என்று அழகுக்கலை நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்..

முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசினால் (பேக் ஆக அப்ளை செய்யுங்கள்) சருமத்தின் பி.ஹெச் அளவு சீராக இருக்கும். எண்ணெய் வழிவது குறையும்.

முல்தானி மெட்டியுடன் பாதாம் பொடி மற்றும் பால் கலந்து பேக் போல் முகத்தில் அப்ளை செய்யுங்கள். வறண்ட சருமத்தினருக்கு நல்ல மாய்ஸ்சர் கொடுக்கும்.

தக்காளி சாறுடன் சந்தனம், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். தக்காளியில் உள்ள விட்டமின் சி சருமத்திற்கு நல்ல பளபளப்பை (குளோ) தரும்.

உங்கள் சருமம் பொலிவிழந்து இருப்பதாக உணர்ந்தால் இந்த தக்காளி சாறுடன் சந்தனம், முல்தானி மெட்டி கலவை தடவினால் பயனுள்ளதாக இருக்கும். முல்தானி மெட்டியுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள் நல்ல பலன் தரும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *