வாழ்வியல்

முகத்தை பளபளப்பாக்கும் எளிமையான வழிமுறை–1

உங்களுடைய முகத்தை பளபளப்பாக்க விருப்பமா? கருமையாக இருக்கும் சருமத்தில் பொலிவை ஏற்படுத்தும் நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. எலுமிச்சை எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது.

இவை, பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பொருளாக உள்ளது. அதிலும் இதில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை பொலிவாக மாற்றலாம்.

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்ஸ அதற்கு எலுமிச்சையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தை விரைவில் வெண்மையாக்கலாம்.

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *