செய்திகள்

முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகம்

சென்னை, ஏப்.9-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விநியோகம் என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6ந் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முகக் கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என்றும் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும் என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10ந் தேதி முதல் மீண்டும் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *