சென்னை , ஜூலை 15:
வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டுக்கு மேல் மின்சார கட்டணம் உயர்வு.
ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 என இருந்த கட்டணம், ரூ. 6.45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரை இருந்த கட்டணம், ஏற்கனவே ரூ. 8.15 இருந்து தற்போது ரூ. 8.55-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரையிலான மின் கட்டணம், யூனிட்டுக்கு ரூ. 9.20 இருந்து தற்போது ரூ. 9.65-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
#திமுக #திராவிடமாடல் #மின்சாரம்