வாழ்வியல்

மிதிவண்டிப் பயிற்சியின் பயன்கள்

Spread the love

உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து அதாவது அரைமணி நேர மிதிவண்டி பயிற்சி குறைந்தது உடம்பில் உள்ள 300 கலோரி கொழுப்பின் அளவை எரிக்கும் சக்தி வாய்ந்தது. அதாவது தொடர்ந்து வாரத்திற்கு 5 அல்லது 6 முறை செய்வதால் 1500 முதல் 2000 கலோரி கொழுப்பு எரிக்கப்படும். இதனால் உடல் பருமன் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

*

உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்து இரத்தக் கொதிப்பு, இதய நோய்களிலிருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கிறது.

*மிதிவண்டி மிதிப்பதற்கு நம் கால்களை உபயோகிக்கும் போது, கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறுகிறது. அதாவது, கால்களின் பின் புறத்தில் உள்ள இரண்டு வலுவான தசைகள் (calf muscle) நம் காலுக்கு வரும் இரத்த ஓட்டத்தைப் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி உந்தி இதயத்தை நோக்கித் தள்ளிக் கால்களில் இரத்த ஓட்டம் தேங்காமல் இருக்க உதவுகிறது. இதற்கு மிதிவண்டி பயற்சி மிகவும் பயனுள்ள ஒன்று.

*

மேலும் நீங்கள் செய்யும் அரை மணி நேர பயிற்சியின் போது சுவாசம் சீராக்கபடுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு (oxygen) கிடைக்கிறது. இதனால் மூளை சீராக இயக்கப்படும் போது தேவையற்ற பயம், மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை அண்டாது. அதோடு மட்டும் இல்லமால் நம் அன்றாடச் செயல் திறனை அதிகபடுத்தி, சோம்பல் தனத்தில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

*

இந்த பயிற்சி மூட்டு வலி உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான ஒன்று. கால்களின் தசைகள் வலு பெரும் போது, தொடைப் பகுதியில் உள்ள தசையான (quadriceps) வலுப்பெற்று எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து வலியில் இருந்து முழு நிவாரணம் அளிக்கும்.

*

இடுப்பில் அதிகமாகத் தேங்கும் கொழுப்பைக் குறைக்க மருத்துவர்களாலும் உடற்பயிற்சி வல்லுனர்களாலும் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியில் மிதிவண்டிப் பயற்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

*

தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் இதயத்தின் இயக்கம் நல்ல செயல் திறனை அடைந்து மாரடைப்பு (Heart Attack) நோயில் இருந்து நம்மை முழுதும் பாதுகாத்து கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் ரத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவும்.

*

உடற்பயிற்சி செய்யும் போது உடம்பில் உள்ள தேவையற்ற அழுக்கு வியர்வை மூலம் வெளியேறுவதால் நாம் புத்துணர்ச்சி பெறுவதோடு சிறப்பான உடல்நலத்தையும் தரும்.

*

கொழுப்பு உடலிருந்து எரிக்கப்படுவ்தால் இரத்த நாளங்களில் ஏற்படும் (artherosclerosis) என்ற நோயை (கொழுப்பு தேங்குவதை) தடுக்கிறது, இதனால் இரத்தக் கொதிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிருந்து பாதுகாக்கிறது. இதனால் நம் வாழ்நாள் கூடுவதோடு, நோயற்ற வாழ்வு வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *