செய்திகள்

மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து 17 தொழிலாளர்கள் பலி

அய்சால், ஆக. 23–

மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 10. 30 மணி அளவில், கட்டுமான பணியில் இருந்த புதிய ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பலியாகி உள்ள நிலையில், 30 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மிசோரம் மாநிலத் தலைநகர் அய்சாலில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 10.30 மணி அளவில், ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணியில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

17 தொழிலாளர் பலி

இந்நிலையில் திடீரென, கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநில உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். புதிதாக கட்டப்படும் ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *