வாழ்வியல்

‘மா’ சாகுபடி தொழில் நுட்பம்!

Spread the love

‘மா’ ரகங்கள்

நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதீன், காலேபாடு, ருமானி, மல்கோவா பையூர்–1, அல்போன்சா, சிந்து போன்றவை ‘மா’ ரகங்கள்.

இதில், வீரிய ஒட்டு ரகங்கள் பெரியகுளம்–1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத , அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.

மண்ணும் தட்பவெப்பமும்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம், மா பயிர் செய்வதற்கு, 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை வெட்டி, செடிகளை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னரே ஆர வைத்து தொழு உரம் கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.

ஒட்டுச்செடிகளை, குழிகளின் நடுவில் நட வேண்டும். செடிக்கு செடி 6 முதல் 100 மீட்டர் வரை இடைவெளி இருக்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவை, ஊடு பயிராக பயிரிட்டு, அறுவடை செய்யலாம். ஒரு மாதத்திற்கு ஒரு முறை, செடியின் வளர்ப்புக்கு ஏற்றவாறு உரம் போட வேண்டும்.

தொழில் நுணுக்கம்

ஆண்டுக்கு ஒரு முறை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக இருக்கும் கிளைகளை வெட்டி விட வேண்டும். ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளர விட வேண்டும். இதனால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு, காய்பிடிப்பு அதிகரிக்கும்.

அறுவடை காலத்தில், மாம்பழத்தின் காம்பு தளர்ச்சியடைந்து பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும் போது, வலை மூலம் காய்கள் அடிபடாமல் பாதுகாப்பாக அறுவடை செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு…

வேளாண்மை அறிவியல் நிலையம்

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேலூர் ரோடு, மதுரை–625104

தொலைபேசி 0452–2422955

www.tnhorticulture.gov.in

www.tnau.ac.in

www.icar.res.in

www.tn.gov.in/social foresty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *