கோவை, பிப். 4–
ஏர்டெல் மற்றும் அமேசான் ஆகியவை இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இலவசமாக பார்க்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
மெகா பிளாக் பஸ்டர் படம் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது.
ஏர்டெலுடன் இணைந்து அமேசான் பிரைம் வீடியோ, பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு திட்டத்தை வெறும் ரூ.89 முதல் துவங்கும் அறிமுக விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒற்றைப் பயனர் மொபைலுக்கு மட்டுமேயான திட்டமாகும்.
இலவசமாக பார்க்க…
இது இந்தியாவில் பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஏர்டெல் பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோவை எஸ்டி தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். இது 1 மாத இலவச சோதனைக் காலத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு அறிமுகத்தின் ஒரு பகுதியாக, தொகுக்கப்பட்ட ப்ரீ-பெய்டு பேக்குகளில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிலிருந்து அமேசானில் பதிவு செய்வதன் மூலம் 30 நாள் இலவச சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம். இதன் வழியாக, பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை ஒரு மாதத்திற்குக் கூடுதல் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பார்க்கலாம்.