டெல்லி, செப். 6–
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிப்பதாக வரும் செய்திகள் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. இவர் ஆகஸ்ட் 19 ந் தேதி சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யெச்சூரி பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
செயற்கை சுவாசம்
மருத்துவக்குழு அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் தற்போது சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அண்மையில் தான் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.