செய்திகள்

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த பெண் தலைவர் உயிரிழப்பு

சென்னை, மே 30–

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மைதிலி சிவராமன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும், கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் இன்றும் குறையவில்லை.

முதல் அலையைக் காட்டிலும் அசுர வேகத்தில் பரவும் கொரனோ இரண்டாம் அலை, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரை மரணமடையச் செய்துள்ளது.

பெண் தலைவர் பலி

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அண்மையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன், தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தவர் என்பதும் வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி, உண்மைகளை ஆவணப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *