சினிமா

மார்கெட் ராஜா M.B.B.S.

இயக்குனர் சரண் இயக்கும் படம் : மார்கெட் ராஜா M.B.B.S. நடிகர் ஆரவுடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்.
(சரவணின் இயக்கத்தில் வந்தது, கமல் நடித்த ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,)
“நான் இந்த படத்தில் ஆரவுடைய காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன். இயக்குனர் சரண் என்னை மிகவும் பேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கே.பி.குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.” என்று நிகிஷா மகிழ்ச்சியோடு கூறினார்.
நிகிஷா படேல் தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து இயக்குனர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர் டீ– சீரிஸ் இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *