வாழ்வியல்

மாமிசம், முட்டை உணவுகளை தவிர்ப்பதால் வரும் பாதிப்புகள்–1

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வீகனிசம் எனப்படும் விலங்குகளிருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் மாமிசங்களை அறவே சாப்பிடாமல் இருக்கும் உணவுமுறையை கொண்டவர்களான வீகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல்நலன், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர்.

சாதாரண உணவுமுறையை மேற்கொள்ளபவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருக்கும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பிபிசியின் ‘ட்ரஸ்ட் மீ ஐ ஆம் ஏ டாக்டர்’ தொடரின் சமீபத்திய பதிப்பில், மருத்துவர் கில்ஸ் இயோ என்பவர், வீகனிசத்தை ஒரு மாதத்திற்கு கடைபிடித்து, அதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு முடிவு செய்தார்.

விலங்குகளோடு தொடர்பில்லாத பொருட்கள் என்று அறியப்படுபடும் உணவுகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதை அவர் வெகு விரைவிலேயே கண்டறிந்தார்.

முட்டைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றிற்கு வீகன்கள் மறுப்புத் தெரிவிப்பதாக கூறினாலும், மயோனைசே (முட்டை கலந்தது), பாஸ்தா (இதுவும் முட்டை கலந்துதான்) மற்றும் மதுவகைகள் (சில வகை மதுபானங்களை தயாரிக்கும்போது அதில் மீன்களின் எலும்புகள் அல்லது மற்ற விலங்குகளின் புரதங்களை கலக்கின்றனர்) ஆகியவற்றை தங்களது உணவுகளில் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *