செய்திகள்

மாநில அள­வில் ஜிம்­னாஸ்டிக் போட்­டி: 6 முறை இருதய ஆபரேஷன் நடந்த 10 வயது துவாரக் தங்கம் வென்று சாதனை

Makkal Kural Official

8 வயது சகோதரன் ஹரியும் தங்கம் வென்றான்

சென்னை, செப். 6–

சென்­­னையில் மாநில அளவில் நடந்த ஜிம்­னாஸ்டிக் போட்­டி­களில் சென்­னையைச் சேர்ந்த சகோதரர்கள் (அண்ணன் துவாரக், தம்பி ஹரி) தங்கம் வென்­ற­னர்.

சென்னை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு மாநில அளவிலான தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் – 2024 போட்டி, வேளச்சேரியில் நீச்சல் குள வளாகத்தில் கடந்த 31ஆம் தொடங்கி 1ம் தேதி வரை 2 நாட்கள் நடந்­த­து. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 வயது முதல் 17 வயது நிறைந்த பள்ளி மாண­வர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 12, 14, 17 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் நடந்தன. 2 நாட்கள் நடந்த போட்டிகளின் முடிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி மொத்தம், 20 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தர்மபுரி மாவட்ட அணி, 10 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் வென்று, 2வது இடமும், தஞ்சாவூர் அணி 5 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் வென்று, 3வது இடத்தையும் பிடித்தன.

இந்த ஜிம்­னாஸ்டிக் போட்­டியில் சென்னை அரும்­பாக்­கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கே. துவாரக் லெவல் 4–ல் தங்கப் பத­க்கம் வென்றான். 8 வயது சிறுவன் கே. ஹரி 2வது லெவல் ஜிம்­னாஸ்டிக் போட்­டியில் தங்கம் வென்றான். துவாரக் இதற்கு முன்பு 3 முறை­யும், ஹரி 2 முறையும் ஜிம்­னாஸ்டிக் போட்­டி­களில் தங்கம் வென்­றுள்­ளனர்.

6 முறை இரு­தய ஆப­ரேஷன்:

10 வயது துவாரக்கிற்கு 6 முறை இருதய ஆபரேஷன் நடந்துள்ளது. இருந்தும் அது பற்றி எந்தவித அச்சமோ, பதட்டமோ இல்லாமல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *