செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் 41 பேர் போட்டியின்றி தேர்வு; 16 பேருக்கு தேர்தல்

டெல்லி, ஜூன் 4–

ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் மொத்தம் 57 பதவிக்கான தேர்தலில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் ராஜீவ் சுக்லா, பாஜகவைச் சேர்ந்த சுமித்ரா வால்மீகி மற்றும் கவிதா பத்திதர், சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மிசா பாரதி மற்றும் ஜெயின் சதுர்த்தி உள்ளிட்ட 41 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

16 பேருக்கு மட்டுமே தேர்தல்

இந்த 41 பேரில் 11 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து நான்கு பேரும், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து மூன்று பேரும், சத்தீஸ்கரிலிருந்து இரண்டு பேரும், பஞ்சாப் தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா இருவரும், சத்தீஸ்கரிலிருந்து ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 41 பேரில் 11 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் தலா நான்கு பேர். திமுக மற்றும் ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர்கள் தலா மூன்று பேர், அதிமுகவிலிருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 பேருக்கான தேர்தல் வரும் 10 தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.