சென்னை, நவ. 18–
சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரண வழக்கில் தலைமறைவான 2 மருத்துவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்னர்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிர் இழந்தார். இது தொடர்பாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவால் மரணம் நிகழ்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.