வர்த்தகம்

மாணவர்கள், வேலை தேடுவோர் ஆங்கில மொழியை செல்போன் செயலி மூலம் கற்க கேம்பிரிட்ஜ் ஏற்பாடு

சென்னை, பிப்.7

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அங்கமான கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ், இந்தியாவில் வேலைவாய்ப்பை எளிதாக்க மொபைல்போன் அடிப்படை யிலான ஆங்கிலத்தேர்வான UPSKILL ஐ அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களும், வேலை தேடுபவர்களும் அவர்களது தொடக்ககால வேலைவாய்ப்பு முயற்சிகளின்போது தங்களுடைய ஆங்கில மொழித்திறனை எளிதாக வெளிப்படுத்த இத்தேர்வு பெரிதும் உதவுகிறது என்று கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ்- தெற்காசிய மண்டல இயக்குனர் டி.கே அருணாச்சலம் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆங்கிலமொழியைப் பயிற்றுவிக்கும் என் குரு இங்கிலீஷ் லேர்னிங் செயலி மூலம் கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ் UPSKILL என்ற இந்த தேர்வை அறிமுகம் செய்துள்ளது. பெரிய நிறுவனங்களில் உள்ள துவக்கநிலை பணிகளை பெறவிரும்பும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்தேர்வு, பேசுதல், கவனித்தல், வாசித்தல், எழுதுதல் போன்ற ஆங்கிலமொழியின் நான்கு அடிப்படை திறமைகளை வளர்க்கவும் உதவுகிறது. மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேர்வினை என்குரு செயலி வழியாக எந்த ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல்போன் மூலமும் எழுதலாம்.

இத்தேர்வின் மூலம் வேலைதரு பவர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியத் தேவையான ஆங்கிலமொழித் திறனைப் பெற்றிருக்கும் நபர்களை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ், இந்தியாவில் மாநில அரசுகளுடனும் மற்றும் தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து, ஆங்கிலமொழி கற்றல் மற்றும் கற்பித்தலின் தரத்தை சர்வதேச மதிப்பீடுகளின் மூலம் உயர்த்தும் நோக்கோடு பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் உள்ள 450-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் தேர்வுகளை வழங்குகின்றன, மேலும் ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஊழியர்களை தேர்வுசெய்யு ம்போது கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் தேர்வுகளை ஒரு தகுதிநிலையாகக் கொண்டுள்ளன. இது பற்றி அறிய www.cambridgeenglish.org என்ற வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *