செய்திகள்

மாட்டுச் சாணம், சிறுநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது என இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எச்சரிக்கை

டெல்லி, மே 11–

மாட்டு சாணம் அல்லது சிறுநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து, பலர் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில், சிலர் வாரத்திற்கு ஒருமுறை, மாட்டு முகாம்களுக்கு சென்று தங்கள் உடல்களை மாட்டு சாணம் மற்றும் சிறுநீரில் முழுவதுமாக நனைத்து கொள்கின்றனர். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அல்லது கொரோனா வைரசில் இருந்து மீட்க உதவும் என நம்புகின்றனர் .

இது மூடநம்பிக்கை

ஆனால் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மாட்டுச் சாணமோ அதன் சிறுநீரோ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது, ஒரு தவறான கருத்து. மேலும், இது சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜே.ஆர்.ஜெயலால் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை.

இது முழுவதுமாக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேறு சில உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *