செய்திகள்

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை

காஞ்சீபுரம், பிப். 8-

மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் திருக்கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு மனித நேய பயிற்சி, தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் தலைமை வகித்தார். கோவில் துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் ஆ.குமரன், மா. வெள்ளைச்சாமி, கவிதா, வெங்கடேசன், ஜெயச்சந்திரன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ஜெ.சுரேஷ்குமார், அலமேலு, ஸ்ரீமதி, மனோகரன், காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் மேலாளர் சுரேஷ், உலகளந்த பெருமாள் கோவில் மேலாளர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் நடந்து கொள்ளுதல், பக்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தாமல் அன்போடு நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் கோயில்களில் தீத்தடுப்பு பயிற்சி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *