சினிமா

மஹாவின் “இயற்கையும் அழகும்” நூல்: நடிகை சங்கீதா வெளியிட்டார்

சென்னை, ஜூலை 26–
அழகுக் கலைத் துறையில் 30 ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர் மகா இன்டர்நேஷனல் அகாடமியின் நிறுவனர் மகாலட்சுமி. அழகு கலை அனுபவத்தை எளிய முறையில் எழுதி மஹாவின் ” இயற்கையும் அழகும் ” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
‘‘பறந்திடுங்கள் பருக்களே’’ “போய்விடுக பொடுகே” , “கண்கவரும் கண்ணே சுகமா”, ” உன் கருகலையத்தை நீக்கலாமா”, ” வரிக்கு இனி வொரிவேண்டாம்” என்ற தலைப்புகளில் வாசிப்பவர்களை கவரும் வகையிலும், அழகு குறிப்புகளை அருகில் இருந்தே சொல்வது போன்றே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
அழகுக்கலை படிப்பு:
‘வேல்ஸ்’ அங்கீகாரம்
நூலை நடிகை சங்கீதா க்ரிஷ் வெளியிட்டார். முன்னதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தலைவருமான டாக்டர் ஐசரி கணேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
முன்னதாக “மை ப்யூட்டி கிளப்” சார்பில் நடத்தப்பட்ட அழகுப்போட்டியில் 20 க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் முகம் மற்றும் சிகை அலங்கார திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் இடம் பிடித்தவருக்கு வெற்றிபெற்றவர்களுக்கு மஹாலக்ஷ்மி கமலகண்ணன் கலர்சென்ஸ் அமைப்புடன் இணைந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் பரிசாக வழங்கினார்.
ஐசரி கணேசன் பேசுகையில், மயிலாப்பூர் மற்றும் அண்ணா நகரில் இயங்கிவரும். மஹா இன்டர்நேஷனல் அகாடமியில் பயின்று பெறும் பயிற்சி சான்றிதழை வேல்ஸ் பல்கலை கடிதம் அங்கீகரிக்கும் என்றும் அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அழகு கலை குறித்த படிப்பை ஒரு பல்கலைக்கழகம் அங்கிகரித்தது என்ற பெருமை மஹா அகாடமியயே சாரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *