சிறுகதை

மஸ்ரூம் | ராஜா செல்லமுத்து

பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் லட்சுமி ஹோட்டலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கும். சுவையும் மனமும் சுத்தமும் சுகாதாரமும் ஒருங்கிணைந்த ஹோட்டல் என்று அந்தப் பகுதி மக்களுக்கு லட்சுமி ஹோட்டல் பெயர் பிரபலம். எங்கு சென்றாலும் அந்தக் கடையில் சாப்பிட்டவர்கள் திரும்பவும் அந்தக் கடைக்கு வந்து தான் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருக்கும்.

அப்படி ஒரு சுவையை உள்நாக்கில் ஒளித்து வைத்திருக்கும் லட்சுமி ஹோட்டல். வாடிக்கையாளர்களை கவனிப்பது, வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது, வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக பேசுவது என்று அந்த ஹோட்டல் நல்ல பெயர் பெற்று விளங்கியது. அப்படி நடந்து கொண்டு இருக்கும் அந்த ஹோட்டலுக்கு சக்தியும் உதயும் சென்றார்கள்.

உதய், நீ என்ன சாப்பிடுற? என்று சக்தி கேட்க, எனக்கு எதுனாலும் பரவாயில்லை என்று உதய் சொன்னான்.

அப்படின்னா எனக்கு, எனக்கு சாப்பாடு உனக்கு என்றான் சக்தி

எனக்கும் சாப்பாடுதான். ஆனா சாப்பாடு அதிகமா சாப்பிட முடியாது. அதனால நான் வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன் என்று அதை சொல்ல, அங்கே நின்று கொண்டிருந்த வெயிட்டர் இருவரின் அருகில் வந்தான்

சார் என்ன வேணும்?

எனக்கு சாப்பாடு. இவருக்கு வெரைட்டி ரைஸ் என்று சக்தி சொன்னான்.

என்ன வெரைட்டி ரைஸ் வேணும்?

என்ன இருக்கு? சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், வெஜிடபிள் பிரியாணி என்று வெரைட்டி ரைஸ்சின் பெயர்களை சொன்னான் வெயிட்டர்

அப்படின்னா எனக்கு வெஜிடபிள் பிரியாணி கொடுங்க என்றான் உதய்

ஆர்டரை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவனைக் கூப்பிட சக்தி, சைடிஸ் என்ன இருக்கு? என்று கேட்டான்.

பன்னீர் மசாலா / பன்னீர் ரோஸ்ட், மஸ்ரூம் ரோஸ்ட் / மஸ்ரூம் மசாலா சாலட்/ புரூட் ரோஸ் மசாலா என்று பெயர்களை அடுக்கினான் வெயிட்டர்.

ஓகே அப்படின்னா மஸ்ரூம் ரோஸ்ட் கொடுங்க என்று சக்தி சொன்னான்.

ஆர்டரை எடுத்தவன் ஓகே என்று சொல்லிவிட்டுச் சென்றான். முதலில் இருவருக்கும் சாப்பிடுவதற்கு சாப்பாடு வெரைட்டி ரைஸ் கொடுத்தான்.

சார் இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க கொடுத்த ஆர்டர் வந்துரும் என்று சொல்லி அவர்களுக்கு சாம்பார் பொரியல் அப்பளம் என்று அத்தனை பேருக்கும் கொடுத்தான்.

இவர்களுக்கும் கொடுத்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மஸ்ரூம் தட்டுடன் வந்தான்.

சார் நீங்க கேட்ட மஸ்ரூம் மசாலா ஒன்று கொடுக்க….

இல்ல நா மஸ்ரூம் ரோஸ்ட் தான் கேட்டேன். நீங்க மஸ்ரூம் மசாலா கொண்டு வந்து இருக்கீங்க. எனக்கு வேண்டாம் என்று சக்தி சொன்னான்.

இல்ல சார் நீங்க மஸ்ரூம் மசாலா தான் கேட்டீங்க என்றான்

இல்ல நான் சிக்கன் 65 மாதிரி மஸ்ரூம் ரோஸ்ட் தான் கேட்டேன். நீங்க தப்பா கொண்டு வந்து இருக்கீங்க. எனக்கு இது வேணாம் எடுத்துட்டு போங்க என்று சக்தி சொன்னான்.

வெயிட்டர் செய்வதறியாது விழித்தான்.

என்ன நிக்கிறீங்க எடுத்துட்டு போங்க என்று மேலும் அதட்டினார் சக்தி.

இதை பார்த்துக் கொண்டிருந்த உதய்.

நாங்க மஸ்ரூம் ரோஸ்ட் தான் கேட்டோம்; நீங்க தப்பா கொண்டு வந்து இருக்கீங்க என்று வெயிட்டரிடம் சொல்ல உதய்க்கும் பதில் சொல்ல முடியாமல் அப்படியே சிலையாக நின்று கொண்டிருந்தான் வெயிட்டர்.

இத நீங்க எடுத்துட்டு போனா உங்கள மாஸ்டர் விடுவாரா. திட்டு வாரா என்று கேட்டான்.

ஆமா என்று தலையாட்டினேன் நான் . தலையாட்டினான் வெயிட்டர். சக்தியும் உதயும் பார்த்துக்கொண்டார்கள்.

சரி எனக்கு திட்டுவதும் திட்டு விழும் என் சம்பளத்துல இது பிடிப்பாங்க அண்ணா என்றான் வெயிட்டர் .

உன்னுடைய கவனக்குறைவுக்காக நாங்களே சாப்பிடுகிறோம். ஆனா நாங்க கேட்டது மஸ்ரூம் ரோஸ்ட் . நீங்க கொண்டுவந்தது மஸ்ரூம் மசாலா. உங்களுடைய வேலை போயிடக் கூடாது அப்படிங்கிறதுக்காக நாங்க சாப்பிடுறோம், போங்க… என்று சொன்னார்கள்.

வெயிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மஸ்ரூம் மசாலாவை இருவரும் சாப்பிட்ட போது அது ரொம்பவே உப்பு அதிகமாக இருந்தது

தூ… என்று சக்தி துப்பிவிட்டு என்ன இவ்வளவு உப்பா இருக்கு இது மனுஷன் சாப்பிடுவானா என்று சொல்லி அந்த மஸ்ரூம் தள்ளிவைத்தார்கள். வெயிட்டைரைக் கூப்பிட்டு, நீங்க முதல்ல தப்பா கொண்டு வந்தீங்க. அதையும் நாங்க சாப்பிட ஆரம்பிச்சோம். ஆனா இந்த மசாலா வாயில் வைக்க முடியாத அளவுக்கு இருக்குது. இதை எடுத்துட்டு போங்க. இத நாங்க சாப்பிட முடியாது. இதக்கு நாங்க பில் கொடுக்கிறோம். ஆனா இதை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று சக்தி சொல்ல வெயிட்டர் செய்வதறியாது விழித்தான்; தவறு மேல் தவறுசெய்துவிட்டதாக உணர்ந்தான் ;

இருவரும் ஒருவாறு புலம்பியபடியே சாப்பிட்டு முடித்தார்கள். கொஞ்சம் கொஞ்சம் மஸ்ரூம் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் மஸ்ரூம் மசாலா பாத்திரத்தில் இருந்தது.

இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவி பில்லுக்கு காத்திருந்தார்கள்.

அந்த வெயிட்டர் பில் உடன் வந்தார். பில்லை வாங்கிப் பார்த்த சக்திக்கு, என்னவோ போல் ஆனது. அதில் சாப்பாடு வெரைட்டி ரைஸ் இதற்கான தொகை மட்டுமே பில்லில் இருந்தது. மஸ்ரூம் பில்லிற்கான தொகை அதில் இல்லை. இதை பார்த்த சக்திக்கு தூக்கிவாரிப்போட்டது. எதிரில் நின்று கொண்டிருந்த வெயிட்டரை பார்த்தார். வெயிட்டர் கண்களாலேயே பதில் சொன்னார்.

பரவாயில்ல சார், நான் பண்ண தப்பு, உங்களை பாதிக்கக் கூடாது. அப்படிங்கறதுக்கு தான் நான் அதை மஸ்ரூம் பில் போடலை. நீங்க இது ரெண்டுக்கும் மட்டுமே பில் கொடுங்க சார் என்று என்று வெயிட்டர் சொன்னபோது….

ஒரு மனிதனுடைய சாதுவான பேச்சு எப்படி லாபத்தை ஈட்டித் தருகிறது. ஒரு நட்பை உருவாக்கித் தருகிறது என்று நினைத்த சக்தி,

அந்த வெயிட்டைரைக் கூப்பிட்டு, அவர் கையில் இருபது ரூபாயை திணித்தார். அதை வாங்க மறுத்துவிட்டார். கையை மிக அழுத்தி அந்த பணத்தை கொடுத்து விட்டு, வெளியே நகர்ந்தார் சக்தி.

வெளியே வந்த இருவரும் பேசிக் கொண்டனர்.

தப்பான ஆர்டரை எடுத்துட்டு போயி நமக்கு பிடிக்காத உணவை அதாவது ஆர்டர் பண்ணாத உணவு கொடுத்தார். நாம அதுக்கு பணம் தரமுடியாது எடுத்துட்டு போங்க என்று சொன்னோம். ஆனா அதுக்கு அப்புறம் உப்பு அதிகமா இருக்கு அப்படின்னு அப்போ எடுத்துட்டு போக சொன்னோம்.

இது எடுத்துட்டு போனா திட்டுவாங்களா? உன் வேலை போயிருமா அப்படின்னு நீ கேட்டதும், அதுக்கு ஆமான்னு சொன்னார். அந்த வார்த்தைதான் அவர் இப்படி மாத்தி இருக்கு. ஆனால் அவர் நாம திட்டிகிட்டு இருந்தோம்.

இது ஒருவகையில் தப்பு துரோகம் ஏமாற்றுவேலை அப்படி இருந்தாலும் கொடுக்குற காசுக்கு போதுமானதா பொருள் இல்லாத போது, நாமதான் கஷ்டப்படுறோம். ஆனா அந்த வெயிட்டர் அப்படி இல்ல. யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது அப்படின்னு நினைச்சான் பாருங்க. நல்ல பையன் என்று அந்த வெயிட்டாரை புகழ்ந்து கொண்டே வெளியே சென்றார்கள்.

செய்த தவறுக்கு அவங்களுக்கு ஏற்படுற நஷ்டத்தையும் எந்த ஒரு மனுஷன் நினைக்கிறானோ அவனே உண்மையான மனுஷன். எனக்கு அந்தத் தம்பி ரொம்ப பிடிச்சிருக்கு. அதனாலதான் அந்த பையன் நம்பர் வாங்கினேன்… இனிமேல் இங்க வந்தா இந்த ஹோட்டலில் தான் சாப்பிடணும் என்ற முடிவோடு உதயும் சக்தியும் நடந்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

வெயிட்டர் பேர கேக்க மறந்துட்டேன் சொன்னானே என்று சக்தி சொல்ல

வா போய் கேட்டு வருவோம். பக்கம் தானே என்று இருவரும் அந்த உணவகத்தை நோக்கி நடந்தார்கள்.

அந்தப் பையன் வேகவேகமாக வேலை செய்து கொண்டிருந்தான்… அவனை பார்த்த சக்தி

தம்பி… என்று கூப்பிட,

உன் பேர் கேட்க மறந்துட்டோம். உன் பெயர் என்ன? என்று சக்தி கேட்க

அந்த வெயிட்டர் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் மஸ்ரூம் என்று ஒரு வார்த்தை சொன்னான்.

இருவருக்கும் என்னவோ போல் ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *