செய்திகள்

மழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை

தூத்துக்குடி மாவட்டத்தில்

மழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை

போலீஸ் எஸ்.பி.,ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி செப்: 19

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித வெள்ளம் வந்தாலும் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலையில் உள்ளது என்று பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் சுழ்நிலை உள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக என்னென்ன பொருட்கள் இருக்கிறது. அவைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது என்பதையும் மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் வலுவான தூக்குப்படுக்கைகள், முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர், பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவித்துள்ள பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

இந்த மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் மற்றும் பேரிடம் மீட்பு உபகரணங்களை இன்று அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி விடுவோம். எந்த வித வௌ்ளம் வந்தால் கூட உடனடியாக மக்களை அல்லது உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது என்று தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், உடனிருந்தார். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமையில் பேரிடர் மீட்பு படையினர் தங்கள் உபகரணங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் செயல்முறை விளக்கமளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *