சிறுகதை

மழை செய்த மாயம்- ராஜா செல்லமுத்து

குருமூர்த்தி,தனலட்சுமி தம்பதிகள் கிராமத்தை விட்டு நகரத்திற்குக் குடிவந்தார்கள்.

அவ்வளவு செல்வாக்கு இல்லாத குடும்பம் என்பதால் நகரத்தில் வந்ததும் அவர்களுக்கு அடுப்படி ஒரே சிங்கிள் பெட்ரூம் உள்ள வீடு தான் கிடைத்தது.

பத்தாவது படிக்கும் மகன் கார்த்திக் ,குருமூர்த்தி மனைவி தனலட்சுமி மகன்,என மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள்.

அந்தச் சிறிய அறையில் மூவரும் உடை மாற்றுவது, தூங்குவது சாப்பிடுவது என்று சகல வேலைகளும் அந்த அறைக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்தன .

ஒரு சில நேரங்களில் மூன்று பேரும் ஒரு இடத்திற்குக் கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் வெளியே வீட்டின் வெளியே இருந்து கொண்டு உடைமாற்றும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

யாராவது உறவினர்கள் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று வீட்டிற்குள் வந்தால் அந்த ஒற்றை அறையில் அவர்களை அமர வைத்து உபசரித்து அனுப்புவதற்குள் குருமூர்த்திக்கு ரொம்பவே அவமானமாக போய்விடும் .

அதனால் யாரும் வீட்டுக்கு வருகிறார்கள் என்று சொன்னால் அவர்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியில் சந்திக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தான் குருமூர்த்தி.

இதனால் அவனின் நட்பு ஓட்டும் குறைந்து கொண்டே வந்தது.ஒரு நாள் கூட அவன் வீட்டிற்கு தங்களை அழைத்துச் சென்று பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு குருமூர்த்திக்கு இருந்தது.

காரணம் உண்மை நிலை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

எப்படியோ ஒரு நாள் குருமூர்த்தியிடம் சொல்லாமலே அவன் நண்பன் நாகராஜ் குருமூர்த்தி வீட்டுக்கு வந்து விட்டான் .

என்ன செய்வது என்று தெரியாத குருமூர்த்தி தன்னுடைய வாழ்நிலை, சூழல், வறுமை இதையெல்லாம் தன் நண்பன் கண்டு கொண்டானே என்று அறிந்ததும் ஒரு பக்கம் அவமானமாகவும் வருத்தமாக இருந்தது .

வீட்டுக்கு வந்தவனை எப்படி வெளியே போகச் சொல்வது. ஒரு வழியாகச் சிரித்துப் பேசி சமாளித்து அவனை வீட்டை விட்டு அனுப்புவதற்குள் குருமூர்த்திக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

வெளியில் பகட்டாக ஆடை அணிந்து வரும் குருமூர்த்தி குடியிருக்கும் வீடு குறுகியதாக இருந்தது என்று நினைத்துக்கொண்டான் நாகராஜ்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதவன் இவர்களின் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டான்.

அந்த ஒரே அறைக்குள் சாப்பிட்டு குளித்து எப்படி சாத்தியம்? என்று புலம்பினான், வருத்தப்பட்டான் நாகராஜ்

ஆனால் குருமூர்த்தியிடம் இது பற்றி கேட்பதைத் தவிர்த்தான் நாகராஜ்.

இதனால் குருமூர்த்திக்கும் தனலட்சுமிக்கான தாம்பத்திய வாழ்க்கை எப்போதாவது நடக்கும் ..

அவன் பள்ளி சென்ற நேரங்களில் அதுவும் பகலில் தான். இரவில் கார்த்திக் வீட்டுக்கு வந்து விடுவதால் இதுவெல்லாம் அவர்களுக்கு பெரிதாகப்படாமல் போனது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வைத்துக் கொண்டும் வாழ்க்கையை நகர்த்த முடியாத சூழலில் இருந்து கொண்டிருக்கும் நமக்கு இந்தத் தாம்பத்திய வாழ்க்கை தேவைதானா? என்று அவர்களுக்குள்ளே அங்கலாய்த்து கொண்டார்கள்.

ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் செய்து கொண்டார்கள். காரணம் வீட்டில் மகன் இருக்கிறான் என்பதுதான்.

வெயில் காலம் வந்தபோது மொட்டை மாடியில் படுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது தனலட்சுமி ஒரு பக்கம் குருமூர்த்தி ஒரு பக்கம் என்று படுத்துக்கொண்டு நடுவில் கார்த்திக்கை படுக்க வைத்தார்கள்.

என்ன வெயில்? என்ன வீட்டிற்குள் உட்கார முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு மொட்டை மாடி மேலே படுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி இப்படி என்று இருந்த மகன் கார்த்தி உறங்கி விடுவான். நடுநிசியில் தனலட்சுமி குருமூர்த்தியும் மகனை விட்டுவிட்டு கீழே வீட்டிற்கு வருவார்கள். அதன் காரணம் அவர்கள் இருவருக்கும் ஆன தாம்பத்திய வாழ்க்கை மட்டுமே .

அதிகாலை வரை அந்த படுக்கையை விட்டு எழுந்து வராமல் இருப்பான் கார்த்திக்.

அந்த இரவு குருமூர்த்திக்கும் தனலட்சுமிக்கும் இன்பமான இரவாக இருக்கும் .

வெயில் இப்படி கொளுத்துகிறது? ஏன் இப்படி அடிக்கிறது ? மனிதர்களை வதைக்கிறது? என்று உலகம் எல்லாம் வெயிலைத் திட்டிக் கொண்டிருந்தாலும் இன்னும் வெயில் அடிக்க வேண்டும் . அப்போதுதான் தங்கள் வீட்டிற்குள் படுக்க முடியாமல் மொட்டை மாடியில் போய் படுப்போம்.

அப்போதுதான் எங்களுக்குள் அந்த தாம்பத்திய வாழ்க்கை சரியாக இருக்கும் என்று மழையை சபித்து வேண்டினார்கள் கணவன் மனைவி.

ஒரு மாத காலங்கள் இப்படியே மகனை மேலே படுக்க வைப்பதும் அவர்கள் நடு சாமம் கீழே வந்து தாம்பத்திய வாழ்க்கை தொடங்குவதுமாக இருந்தார்கள்.

இந்த வெயில். இந்த வாழ்க்கை இந்த வெப்பம். அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வருண பகவானை வேண்டிக் கொண்டு மழையே வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்தார்கள்.

ஒரு நாள் மாடியில் படுத்து உறங்கும்போது சட சட சட சடவென மழை பெய்தது.

தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி, மகன் மூவரும் வெளியே வந்தார்கள் .வேறு வழியில்லை கீழே தான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்த இரவு அவர்களுக்கு கணவன் மனைவிக்கு வெறுமையான இரவாக இருந்தது .

வேறு வழியில்லை ; தாம்பத்தியத்தை தள்ளிப் போடுவோம் என்று முடிவு செய்தார்கள் .

அன்று தொடங்கிய மழை 5 நாட்கள் 10 நாட்கள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

அவர்கள் மொட்டை மாடியில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. கணவன், மனைவி, மகன் என்று அந்தச் சிறிய அறையில் ஜீவனம் செய்ய வேண்டிய நிலை தொடர்ந்தது .

குருமூர்த்திக்கு வருண பகவானின் மீது கடுமையான கோபம். ஏன் மழையே இப்படி வந்து எங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறாய்? நல்லாத்தானே இருந்தாய். யார் உன்னிடம் மழை கேட்டதென்று? வருண பகவானைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மழை விட்ட பாடவில்லை. அந்த சின்ன அறைக்குள் மூன்று ஜீவன்கள் படுத்திருந்தனர்.

மழை எப்போது நிற்கும். மாடிக்கு எப்போது போய் தூங்கலாம்? நடுநிசியில் மகனை விட்டு வீட்டிற்கு எப்பாேது திரும்பி வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தம்பதிகளுக்கு அந்த ஒரு மாத காலமும் மழை காலமாகவே இருந்தது.

இதனால் தொடர்ந்து தாம்பத்திய வாழ்க்கை தள்ளிப் பாேய்க் கொண்டிருந்தது.

இனிமேல் எல்லாம் மழை மாதம் தான். மூணு நாலு மாசத்துக்கு ஒரே மழைக்காலம்தான். என்ன வேர்வை? என்ன வெயிலு? என்ன வெட்கை. இப்பதான் உடம்பும் மனசும் ரொம்ப குளிர்ச்சியா இருக்கு என்று இந்தியாவே பேசிக்கொண்டாலும்

ஏன்டா மழை பெய்யுது? மழை பெய்யப் பெய்ய எங்க தாம்பத்திய வாழ்க்கை தான் தள்ளிப் போயிட்டு இருக்கு ? மழை நிற்க வேண்டு என்று வேண்டிக் கொண்டார்கள் குருமூர்த்தியும் தனலட்சுமியும்.

ஆனால் மழை விட்டபாடில்லை சாே என பெய்து கொண்டே இருந்தது .

தம்பதிகள் மாடிக்குத் தூங்கச் செல்ல முடியவில்லை .தாம்பத்திய உறவும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

வெளியே மழை வலுத்துக் காெண்டிருந்தது. குருமூர்த்தி, தனலட்சுமி இருவரும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்காெண்டிருந்தார்கள்.

கார்த்திக் மட்டும் நிம்மதியாகத் தூங்கிக் காெண்டிருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *