செய்திகள்

மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

Makkal Kural Official

மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்

சென்னை, நவ.30-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்​சாரம் வந்தவுடன் இயக்க வேண்​டாம். மின்சார மீட்டர் பொருத்​தப்​பட்​டுள்ள பகுதி ஈரமாக இருந்​தால் உபேயாகிக்கக் கூடாது.

வீட்​டில் மின்​சாரம் இல்லை​யென்​றால் அருகில் இருந்து தாங்​களாகவே ஒயர் மூலம் மின்​சாரம் எடுக்க வேண்​டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்​கும் பகுதி​கள், மின்சார கேபிள்​கள், மின்சார கம்பங்​கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்​பார்​மர்கள் இருக்​கும் பகுதி​களுக்கு அருகில் செல்லக் கூடாது. சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்கள் மற்றும் மின் சாதனங்​களுக்​கருகே தேங்​கிக் கிடக்​கும் தண்ணீரில் நடப்​பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்​தில் செல்வதையோ தவிர்க்க வேண்​டும். தாழ்வாக தொங்​கிக் கொண்​டிருக்​கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்​வதை​யும், தொடு​வதை​யும் தவிர்க்க வேண்​டும்.

மின்சார கம்பத்​திலோ அல்லது அதற்காக போடப்​பட்​டுள்ள ஸ்டேவயரின் மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்​டாம். மின் கம்பத்​திலோ அல்லது அவற்றை தாங்​கும் கம்பங்​களிலோ கால்​நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்​கிக் கொண்​டிருந்​தாலோ, மின் கம்பங்கள் உடைந்​திருந்​தாலோ, சாய்ந்​திருந்​தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்​களுக்கு உடனடியாக 24 மணி நேர​மும் செயல்​படும் ​மாநில மின்நுகர்​வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு ​கொள்ள வேண்​டும்.

இவ்​வாறு அ​தில் கூறப்​பட்டுள்​ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *