செய்திகள்

மழை: இலங்கை – நேபாளம் ஆட்டம் ரத்து

சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது

இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட பின்னர், 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் அணியாக தென்னாப்பிரிக்கா ஆனது.

புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இன்று காலை நடைபெற இருந்தது. முதலில் பலத்த மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பின்னர் அவுட்பீல்ட் ஈரப்பதம் காரணமாக போட்டி ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் நேபாளம் மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இலங்கை தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குரூப் ‘டி’ பிரிவு புள்ளிகள் பட்டிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நேபாளம் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்து நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த குழுவில் தென்னாப்பிரிக்கா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. 2வது அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *