சிறுகதை

மழலையின் மனிதாபிமானம் | ஜானகி சீத்தாராமன்

கை நிறைய பிஸ்கட், ஸ்நாக்ஸ், பழங்கள் நிரம்பிய பையுடன் உள்ளே நுழைந்தான் சதீஷ். ‘‘அப்பா…’’ என்றபடி ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள் அவனது 3 வயது மகள் கரோலின்.

‘‘இருடா தங்கம்… அப்பா குளிச்சிட்டு வந்துடறேன்’’ என்றபடி அவளை விலக்கி விட்டு, ‘‘ஜென்னி! இதையெல்லாம் எடுத்து உள்ளே வை’’ நா குளிச்சிட்டு வந்துடறேன்’’ என்று கிளம்பினார் சதீஷ்.

சதீஷை நோக்கி ஜென்னி, ‘‘என்னங்க, இதை பக்கத்து வீட்டுக்கு குடுக்கலர்களா ? அந்த அண்ணன் தினக்கூலிக்குத்தான் பொயிட்ருக்காரு. இந்தஊரடங்கால பத்து நாளா வெலையும் இல்லை.

நம்ம கரொலினை விட சின்னக் குழந்ந்த வெற. ராத்திரி எல்லாம் அபுதுட்டெ இருந்துது.பாவம். பசிதான் பொல. என்ற ஜென்னியை முறைத்தான் சதீஷ்.

இங்க பாரு ங்க . அதல்லாம் ஒண்ணும் வெணாம். இன்னிக்கு குடுத்தால் நாளைக்கும் எதிர்பாப்பர்ககள்.தினமும் நம்பளால குடுத்துட்டு இருக்க முழயஜமா, தனக்கு மிஞ்சிதான் தானம். தருமம் எல்லாம். பெசாம பொயி வெலயப் பாரு என்றான் சதீஷ்.

சரிங்க என்று கணவனை எதிர்த்துப் பெச இயலாத ஜென்னி அவன் வாங்கி வந்த பாருட்களை எடுத்து உள்ளெ வைத்தாள். அதிலிருந்து நான்கைந்து பிஸ்கட்டுகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் பொட்டு. குழந்தை கரொலினிடம் கொடுத்து. கீழே சிந்தாம சாப்டு. அம்மா சமயல் வெலய பாக்குறென் என்று கூறி விட்டு உள்ளே சென்றாள். பக்கத்து வீட்டிலிருந்து குழந்தையின் அழுகுரல் கெட்டுக் கொண்டிருந்தது.

குளியலறையிலிருந்து வெளியெ வந்த சதீஷ். ஜென்னியை அழைத்து பாப்பா எங்க, என்றான்.

பிஸ்கட் சாப்டுட்டு ஒக்காந்திருந்தா என்று கூறிக் காண்டெ சமையலறையிலிருந்து வெளியெ வந்த ஜென்னி. அந்த இடம் காலியாக இருப்பதைப் பார்த்து. ஐயய்யொ என்று அலறினாள்.

கரொலின் பாப்பா என்று இருவரும் கத்தியபடி. கதவைத் திறந்திருப்பதைப் பார்த்து வெளியெ வந்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்த செல்வி. பதறாதீ்ங்கக்கா! கரொலின் இங்கதான் இருக்கா. இங்க வந்து பாருங்களேன் என்றாள்.

சதீஷும் ஜென்னியும் உள்ளெ சென்ற பொது தன் கையிலிருந்த பிஸ்டிகட்டை உடைத்து அந்த குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் கரொலின். அதுவும் அழுகையை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

சரியாக பேச்சுக் கூட வராத அந்த மழலைக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட தனக்கு இல்லாமல் பொனதை நினைத்து வெட்கித் தலைகுனிந்தான் சதீஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *