செய்திகள்

மலேரியா கொசுக்களை கொல்லும் ஒரு பூஞ்சை!

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை கொல்ல, ஒருவித பூஞ்சையை பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட அந்த பூஞ்சை, சிலந்தியின் விஷத்தை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. அதைத் தொடும் கொசுக்களில் பெரும்பாலானவை, இறந்துபோய் விடுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ என்ற நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், 6.5 ஆயிரம் சதுர அடியில், சில வலைக் கூடாரங்களை உருவாக்கினர்.

அதில், குடிசைகள், தண்ணீர் மற்றும் கொசுக்களுக்கான உணவுகளை வைத்து, மலேரியாவைப் பரப்பும் கொசுக்களையும், ஏராளமாக உள்ளே விட்டு வளர்த்தனர்.

மரபணு மாற்றப்பட்ட பூஞ்சைகளை சில கூடாரங்களில் வைத்தனர்.

அதைத் தொட நேர்ந்த, 75 சதவீத கொசுக்கள், 45 நாட்களுக்குள் உயிரிழந்தன. எனவே அந்த பூஞ்சைகளை வைத்து, கொசுவிரட்டி செய்வது குறித்து, தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *