செய்திகள்

மலேசியா சன்வே பல்கலைக்கழகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி ஒப்பந்தம்

கோவை, பிப். 12

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மலேசியாவின் சன்வே பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயர் கல்வித் துறையிலும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழக பங்குதாரர்களுடனும் இணைப்பு உறவை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், மலேசியாவின் சன்வே பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பினை வெளிநாடுகளில் தொடரவும், பட்டப்படிப்பின் ஒரு பருவத்தினை வெளிநாடுகளில் படிப்பதற்கும், ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களைப் படிப்பதற்கும், பேராசிரியர்கள் இடமாறி பயிற்சி அளிக்கவும் முடியும். மேலும், ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், கருத்தரங்கக் கட்டுரைகள் வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் முடியும்.

சன்வே பல்கலைக்கழகம் மலேசியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆக்ஸ்போர்டு மற்றும் விக்டோரியா பல்கலைக்கழகங்களின் பங்குதாரராக வும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் கருணாகரன், கல்விபுல இயக்குநர் ஏ.எபினேசர் ஜெயக்குமார், வணிகவியல் பேராசிரியர் அகிலா, சர்வே கல்வி நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குநர் எலிசபெத் லீ, விக்டோரியா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் கிரிஜா டி சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *