செய்திகள்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

Makkal Kural Official

சென்னை, டிச 31–
கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி, தற்போது மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் சென்னை தி. நகர் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன. இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு தி.நகர் கிளை துணை தலைவர் ரத்தீஷ், மேலாண்மை பயிற்சி முஹ்சின் யாசின் ஆகியோர் உடனிருந்தனர்.கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி ஜனவரி -25ந் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.இந்நிறுவனம் தற்போது 13 நாடுகளில் 360-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளை கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *