சென்னை, பிப் 6–
இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமும், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்–ன் தாய் நிறுவனமுமான மலபார் குழுமம் 2024–25ஆம் கல்வியாண்டிற்கு தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி.அகமது, நிர்வாக இயக்குனர் அஷர் ஓ, தமிழ்நாடு மண்டல இயக்குனர் யாசர் கே.பி., வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மேற்கு மண்டல தலைவர் நவுஷாத், கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமத் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் கல்வி உதவித்தொகை திட்டம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ரூ.16 கோடி நிதியை இந்தக் குழுமம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 446 அரசு பள்ளியில் படிக்கும் 3,511க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.2.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 797 மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கி உள்ளது.
இந்த குழுமத்தின் தனித்துவமான சமூக பொறுப்பு முயற்சியான மலபார் கல்வி உதவித் தொகை திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. மகளிருக்கான கல்வியை ஆதரிப்பதில் அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
2007ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இன்றுவரை இந்தியா முழுவதும் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ரூ.60 கோடிக்கும் மேல் முதலீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்விக்காக ரூ.13.60 கோடிக்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
–––––––––––––––––––––––––––––––––
சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில், மலபார் குழுமத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 446 அரசு பள்ளிகளில் படிக்கும் 3511 மாணவிகளுக்கு ரூ.2.80 கோடி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அருகில் மலபார் குழும சேர்மன் எம்.பி.அகமது மற்றும் பலர் உள்ளனர்.