வாழ்வியல்

மலச்சிக்கலரத் தீர்க்கும் உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி சிறந்த நரம்பு வெப்பம் அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது.

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து உடையது. இது மலத்தை கரையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.