செய்திகள்

மறக்க முடியா அந்ஷுமான் கைக்வாட்

Makkal Kural Official

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் அந்ஷுமான் கைக்வாட் ஆவார்.

தனது மன உறுதியையும், துணிவைவயும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கைக்வாட், 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

1974ம் ஆண்டு டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தைச் செய்த கைக்வாட், ஆரம்ப போட்டிகளிலேயே புகழ்பெற்ற திறமையாளராக திகழ்ந்தார். ஸுனில் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரராக தனது இடத்தை நிலைநிறுத்தி, 36 டெஸ்ட் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 40 டெஸ்ட் போட்டிகளில் 1,985 ரன்கள் எடுத்து, 30.07 சராசரியைப் பெற்றிருந்தார்.

கிங்ஸ்டனில் இரத்த வெறி தாக்குதல்

1976ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த அதிரடியான போட்டியில் கைக்வாடின் வீரத்தை காண முடிந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 406 ரன்கள் அடித்து சாதனை செய்ததை தகர்க்க, க்லைவ் லாய்டு தலைமையிலான மேற்கிந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கைக்வாடை எதிர்கொண்டனர். மைக்கேல் ஹோல்டிங், வேன் டேனியல், ஜூலியன் மற்றும் ஹோல்டர் ஆகியோர் இணைந்து கைக்வாடின் துணிவை சோதனைக்கு உட்படுத்தினர்.

கைக்வாட் ஒரு செய்தியாளரிடம் கூறியதாவது: “அது மதிய உணவிற்கு முந்தைய இறுதி ஓவர், மிக்கி (மைக்கேல் ஹோல்டிங்) ரவுண்ட் தி விக்கெட் பந்துவீசி கொண்டிருந்தார். பந்து அடிக்கும் போது என் விரலில் அடிபட்டது. பெரிய விஷயமில்லை, என்று நினைத்து மீண்டும் என் இடத்தில் நின்றேன். ஆனால் ரத்தம் வழிய ஆரம்பித்தது. டெரிக் மொரே (விக்கெட் கீப்பர்) மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் வந்தனர். நான் அவர்களை மதிக்காமல் உன் வேலையை பார் என்பது போல் முறைத்தேன்.

பந்து வீக வந்த. மிக்கியை பார்த்தபடி முடிஞ்சதை செய்து கொள் என்பது போல் விரலை அசைக்க , அடுத்த பந்தில் என் காதில் பாயும்படி வீசினார்.

. என் தலையினுள் ஏதே நேர மணி ஓசைகள்! தரையில் கிடந்த நான் ஸ்ட்டிரச்சலில் தூக்கி செல்லப் விடவில்லை. உதவ வந்த அணியின் சகாக்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏக்நாத் (சோல்கார்) கையைப் பிடித்தபடி நடந்தே வெளியேறினேன்!

இவ்வாறு, கைக்வாட் தனது துணிச்சலுடன், இந்திய கிரிக்கெட்டில் தன்னுடைய தனித்துவமான இடத்தைப் பெற்றார்.

அவரது வீரத்தை நம் கிரிகெட் உலகில் நமக்கு பெற்று தந்த பெருமைகளையும் நினைவுகூர்ந்து அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்தித்து அஞ்சலி செலுத்துவோம்.

#AnshumanKaikwad #CricketLegend #GoneTooSoon #RIPAnshumanKaikwad #BraveWarrior #ForeverInOurHearts #CricketHero #FarewellChampion #AnshumanKaikwadTribute #CricketCommunityMourns #cancer #bloodcancer

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *