செய்திகள் வாழ்வியல்

மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை குணப்படுத்தும்புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகளை அழித்துக்குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இது புதிய சிகிச்சை வழிமுறைகள் நல்வாய்ப்புகளைத் திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது.

மார்பக, கருப்பை, கணையம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும் அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மருந்துகளால் அணுக முடியாத இடங்களை இந்த ஒரு புரதம் செய்யவல்லது என்பது மிகவும் பயனுள்ளதாகும். இது தொடர்பான ஆய்வுகளை நோயுள்ள மனிதர்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

விலங்குகளை அடிப்படையாக கொண்ட செய்முறையின் மூலம் பல வகையான புற்றுநோய் கலங்களில் எங்கள் ஆய்வுகளை பல தடவைகள் மீண்டும் மீண்டும் மேற்கொண்டு, தரவுகளை உறுதிப்படுத்தியுள்ளோம் என அமெரிக்காவின் ரெக்சஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும், இந்த ஆய்வின் பிரதம விஞ்ஞானியுமான பேராசிரியர் ரட்னா வட்லமுடி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *