செய்திகள்

மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் ஒட ஒதுக்கீடு

மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் ஒட ஒதுக்கீடு :

மொழி சிறுபான்மையினர் பேரவை தலைவர் சி.எம்.கே.ரெட்டி கோரிக்கை

 

சென்னை, ஜூலை 22–

மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவ மாணவிக்கு ஒட ஒதுக்கீடு வழங்கியது போல, அரசு உதவி பெறும் 1500க்கும் அதிகமான பள்ளிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மொழி சிறுபான்மையினர் பேரவையின் தலைவர் சி.எம்.கே.ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மொழி சிறுபான்மையினர் 30 சதவீதம் அளவுக்கு உள்ளனர் என்று உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். மொழி சிறுபான்மையினர் நடத்தக்கூடிய 1,500க்கும் அதிகமான பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும், ஆதரவையும் தமிழக அரசு அளித்து வருகிறது. எனவே இந்த பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். அதாவது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வசிக்கும் மொழி சிறுபான்மையினரின் விருப்பங்கள் மீது முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தது என்பது இந்த தருணத்தில் நினைவு கூரத்தக்கது என்றும் சி.எம்.கே.ரெட்டி சுட்டிக் காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *