செய்திகள்

மருத்துவமனைகளில் இனி “ஜீரோ டிலே வார்டு”

சென்னை, மே 24–

தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும்ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதில் பலர் மூச்சுத்திணறல் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இதுபோன்று மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில், இவ்வாறு வருபவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முன் ஆம்புலன்ஸில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஜீரோ டிலே வார்டு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருப்பதை தவிர்க்க முடியும். மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை காலியாகும் போது, நோயாளிகள் அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப, வார்டில் சேர்க்கப்படுவர் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *