சினிமா செய்திகள்

‘மரீன் என்ஜினீயர்கள்’ விக்னேஷ், கோபிநாத், சுரேஷ்: சினிமா போதையில் காட்டவரும் ‘ஃபாரின் சரக்கு’!

ழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்றைய தேதியில்,

விக்னேஷ் கருப்பசாமி, கோபிநாத், சுந்தர், உசேன், அஃப்ரனா (பெண்)

இந்த ஐவரும் அழுத்தந்திருத்தமாக அடையாளம் காணப்படுவார்கள் இந்தத் திரை உலகில், இன்னும் 2 ஆண்டுகளுக்குள்.

கனவுகள் – கற்பனைகளோடு இந்த கலையுலகில் கால் பதித்து எப்படியாவது நாமும் ரசிகர்கள் கலைஞர்கள் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்றாக வேண்டும் என்ற வைராக்ய வெறி, அவர்களின் பேச்சில் தெரிகிறதே!

அந்த நம்பிக்கை, அதோடு விடாமுயற்சியும் இருக்கிறதே. அப்புறம், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!

* இதுவரைக்கும் சினிமாவில் முகம் காட்டாத 300 இளைஞர்கள் முகம் காட்டியிருக்கும் படம், ‘ஃபாரின் சரக்கு’

* விக்னேஷ்வரன் கருப்பசாமி (டெக் ஆபீசர்) அறிமுக இயக்குனர். கோபிநாத் – அறிமுக தயாரிப்பாளர், முக்கிய வேடத்தில் நடிகர் இதேபோல இணைத் தயாரிப்பாளர், முக்கிய வேடத்தில் நடிகர் சுந்தர் (இருவரும் மரீன் என்ஜினியர்கள்) ஆகிய மூவரும் கப்பலில் பணியாற்றி வரும் இளைஞர்கள்.

மூவரும் இணைந்து எடுத்திருக்கும் குறும்படங்களின் அனுபவத்தில் முழுநீள திரைப்படம் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள். அதன் தாக்கம்: ‘ஃபாரின் சரக்கு’ (நிறுவனத்தின் பெயர்: நெப்டியூன் செய்வர்ஸ். நங்கூரம் – எம்பளம்)

* ‘ஃபாரின் சரக்கு’ டைட்டில், பல கேள்விகளை எழுப்பும். குஜராத்துக்கும் – தமிழகத்துக்கும் நடுவில் நடக்கும் ஒரு கதைக்களம். அதன் மையப்புள்ளி தான் ‘ஃபாரின் சரக்கு’

(சாமான்யனை இழுக்க வேண்டுமே, அதற்கான ‘கிக்’ டைட்டில்?!)

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தருக்கு முதல் படமா… நம்ப முடியாது.

வில்லன் உசேன் – கதாபாத்திரத்திற்கு பொருத்தம். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் படங்களில் வில்லன்… குரூப்பில் விரைவில் பதவி உயர்வு பெற்று விடுவார். சுரேந்தர் சுந்தரபாண்டியன் – அலட்டல் இல்லை.

பிரவீன் ராஜ் இசை. பின்னணி இசை பலம். ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா இரவு காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் நன்றாக சுழன்றிருக்கிறது. எடிட்டர் – பிரகாஷ்ராஜ்.

முன்னணி ஹீரோக்களுக்கான கதைக்கரு. திரைக்கதை காட்சிகள். கறுப்பு – வெள்ளையில் சில காட்சிகள். கலரில் பல காட்சிகள். கறுப்பு – வெள்ளை, 1960களை நினைவூட்டும்.

ஆடிக்காற்றிலே அம்மியே பறக்கிற காலத்தில், இலவம் பஞ்சு போன்ற விக்னேஷ்வரன் – கோபிநாத் – சுந்தர் கூட்டணி

பூஜை போட்டு படத்தை முடித்து அதையும் வெற்றிகரமாக தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறார்களே

அந்தத் துணிச்சல், உழைப்பை முடக்கி விடக்கூடாது என்ற உத்வேகம்… அதற்காகவே மூவரையும் பாராட்டலாம், வாழ்த்தலாம்.


– வீ. ராம்ஜீ


Leave a Reply

Your email address will not be published.